நாசா அனுப்பிய விண்கலத்தின் முக்கிய பங்காற்றிய இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்தின் ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பழங்காலத்து உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுகளை செய்தது. நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்கலம் ஒன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காவும் அங்கிருந்து சிறிதளவு மண் மற்றும் கற்களை பூமிக்கு எடுத்து வரவும் அனுப்பப்பட்டது. நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கலம் கிரகத்தில் இரண்டு ஆண்டுகள் சுற்றி பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவேதா மேனன் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கிய 2013 ன் முதலில் இருந்தே ஈடுபட்டு வந்தவர் டாக்டர் சுவாதி மேனன். இவர் பங்கு ஜி.எம். அண்ட் .சி என அழைக்கப்படும் வழிகாட்டுதல் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் மிகச் சிறந்த தலைவராக விளங்கினார். மேலும் இவர் பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்னும் தொழில்நுட்பத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளார்.
இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். தனது ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்ற இவர் பள்ளியில் படிக்கும் போது குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஸ்டார் டிராக்” என்னும் நிகழ்ச்சியை பார்த்து அதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. மேலும் புதிய உலகங்களை பார்க்க வேண்டுமென்றும் அவற்றை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்றும் சிறுவயதிலேயே திட்டங்களை மேற்கொண்டார். இந்நிலையில் சுவாதி தற்போது விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளையும் ஆராய்ச்சியையும் முடித்து டாக்டர் பட்டமும் பெற்று மிகச் சிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தார். மேலும் நாசாவில் சனி கிரகத்திற்கான பயணத்தையும் நிலவுக்கு செல்வதற்கான பயணத்தையும் அதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.