நேற்று, தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார். என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது.
அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது என ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையும் மீறி நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் டெண்டர் விட்டது சரி, உலக வங்கி ஒப்புதல் சரி என அனைத்தும் முறையாக இருக்கின்றது இது அரசியல் உள்நோக்க வழக்கு என கூறி திமுக பெட்டிஷனை தூக்கி போட்டுவிட்டது.
நீதிமன்றம் தடை செய்த ஒரு விஷயத்தை அரசியலுக்காக ஆளுநரிடம் கொடுத்துவிட்டு 30கோடி இந்த துறையில் ஊழல் என சொல்லுறாரு. இதை கோர்ட்டில் வந்து ஸ்டாலின் சொல்வாரா ? நீதிமன்றத்தில் சொல்லாமல் வெற்று அறிக்கையாக…. அரைவேக்காடு அறிக்கையாக… எதிலும்யும் உண்மை இல்லாமல் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார் ஸ்டாலின். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.