வேகமாக உணவு சாப்பிட்டால் எவ்வாறான ஆபத்துக்களை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சில சாப்பிடும் போது மிக வேகமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவது மிகவும் தவறு. வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அது மட்டுமன்றி நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, இதய பிரச்சனை, அஜீரணம் போன்ற நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதாவது ஒரு வாய் உணவை குறைந்தது 20 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் அந்த உணவின் ருசி, மனம் மூளைக்குச் சென்று திருப்தி கிடைக்கும். அதனால் உடல் எடை குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வேகமாக உணவு சாப்பிடும்போது அது தொண்டையில் சிக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இனி உணவு சாப்பிடும்போது சற்று பொறுமையாக சாப்பிடுங்கள்.