நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய மத்திய அரசு கடன் வழங்காமல் மாநில அரசுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த மாநிலங்களில் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் ரூ.38,088 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதாக தொழில் செய்யும் சூழல் மேம்பட்டால், பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் என்ற நோக்கில் கூடுதல் கடன் பெற அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் நேரடியாக மாநிலங்கள் கடன் பெறுவது அவற்றில் நிதி சுமையை தான் அதிகரிக்கும். இதற்கு பதிலாக மத்திய அரசு குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ஆனால் அதனை மத்திய அரசு செய்யவில்லை.