Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும்,

உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் ஆசீர்வாதத்தாலும், நான் வந்து ஆளுநராக இருந்து கொண்டிருக்கின்ற தெலுங்கானா மக்களின் அன்பாலும்நான் இங்கே வந்து இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .

உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே இன்று காலை சென்றேன். தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், தமிழ் எனது பெயரில் மட்டும் அல்ல எனது உயிரிலும் இருக்கிறது என்று.

தமிழில் இங்கே உள்ள அதிகாரிகளிடம் தமிழில் நான் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன போது அவர்கள் இதுவரை புதுச்சேரி சரித்திரத்தில் எத்தனையோ ஆளுநர்கள் வந்திருக்கிறார்கள், யாரும் தமிழில் எடுக்கும் வாய்ப்பு இல்லை. அவர்கள் மீது குறை இல்லை. ஏனென்றால் அவர்கள் அந்த மொழியை தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மொழி தெரிந்த ஒரு மாநிலத்தில் வந்திருப்பது புதுச்சேரி மக்களுக்கு உதவி புரிவதற்காக , சேவை புரிவதற்காக அன்போடு பழகுவதற்காக என்ற நிலையில் எனது மகிழ்ச்சியை நான் இங்கே பதிவு செய்கிறேன்.புதுச்சேரி மாநிலத்திற்கு வந்திருக்கிறேன். புதுமையாக பல நிகழ்வுகளை நடத்தி காண்பிக்க வேண்டும் என்றும்,  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் தெலுங்கான ஆளுநராக பதவி ஏற்றுள்ளேன்.

தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றபோது இவர் இளைய ஆளுநர், இவர்கள் எப்படி இந்த மாநிலத்தை கையாள்வார்கள் என்று சொன்ன போது, நான் சொன்னேன். நான் ஒரு மகப்பேறு மருத்துவர், பிறந்த குழந்தையானது தெலுங்கானாவை கையாள்வது எனக்கு தெரியும் என்று சொன்னேன் . ஒன்றரை வருடங்களாக சிறப்பாகவே கையாண்டு இருக்கிறேன்.

அதனால் என் மீது நம்பிக்கை வைத்து இங்கே புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக எனக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுதும் அதைதான் சொல்கிறேன். நான் மகப்பேறு மருத்துவராக இருக்கும்பொழுது ஒரு குழந்தை பிறந்தாலும் அதை சரியாக பாதுகாப்பேன். இரட்டை குழந்தை பிறந்தாலும் அதையும் சரியாக பாதுகாப்பேன். ஆக இந்த இரட்டை குழந்தைகள்  என் கையில்  இருக்கிறது என்ற வகையில் நான் மகிழ்ச்சியாக எனது சேவையை ஆற்ற இருக்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |