Categories
தேசிய செய்திகள்

“என் மனைவிகிட்ட தப்பா நடந்தாரு” கூலிப்படைக்கு 2 லட்சம் கொடுத்து…. தந்தையை கொன்ற மகன்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் பவன்(45). இவர் சம்பவத்தன்று 10 மணி அளவில் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். ஆனால் விடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கரும்புத் தோட்டத்திற்கு நடுவில் பவன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் பவனின் மகன் அமித் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்ந்து விசாரித்த போது தன்னுடைய தந்தையை தான் ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில், “தன்னுடைய தந்தை தான் இல்லாத நேரங்களில் தன் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி வந்ததால் கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து வாக்கு மூலம் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட தந்தையை தன் மகனே ஆள் வைத்து சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |