நாடு முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் மொபைலில் பேசுவதற்கும்,இணையதளத்தை பயன்படுத்துவதற்கும் கட்டணங்களை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 2021-2022 ஆம் நிதியாண்டில் தங்கள் வருவாயை அதிகரிக்க வேண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. ஆனால் அவற்றின் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.