6 லட்சம் நிதி செலவில் அரசு பள்ளியில் கலை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வி.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த தலையங்கத்தை சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி, மதுசூதனன் எம்.எல்.ஏ திறந்து வைத்துள்ளார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், டெல்லி பாபு, மதுசூதனன் காரணை புதுச்சேரி ஊராட்சி தி.மு.க கிளைச் செயலாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சூரியகலா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.