பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியநிலையில், 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது குறித்து விவாதிக்க வருகின்ற ஜூலை 8 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சி கூட்டம் தலைமை செயலக அலுவலகத்தில் வைத்து மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.