சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை, குப்பம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன், செந்தில் போன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.