Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. மின்கம்பத்தில் ஏறி…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இளைஞர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அவர் கீழே இறங்க சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.  இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலம் மின்கம்பத்தில் ஏறி அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கி உள்ளனர். இதையடுத்து அவர் நடத்திய விசாரணையில் அவர் செங்கோட்டை பகுதியில் வசிக்கும் ஆபிரஹாம் ( 43) என்பது தெரியவந்துள்ளது. இவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |