மாம்பழ குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
மாம்பழ விழுது – 1 கப்
மாம்பழ துண்டுகள் – 1 கப்
பால் – 1 லிட்டர்
மில்க் மைட் – 100 மில்லி
சர்க்கரை – 150 கிராம்
பாதாம், பிஸ்தா – 6 (துருவியது)
முந்திரி – 3 (துருவியது)
ஏலக்காய் துள் – சிறிய சிட்டிகை
பால்கோவா – 1/4 கப்
குங்குமப்பூ – சிறிய சிட்டிகை
சோளமாவு – சிறிதளவு
செய்முறை:
முதலில் பழுத்த மாம்பழ பழங்களை எடுத்து, அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கியபின், அதன் சதைப்பகுதியை மட்டும் துண்டுகளாக நறுக்கியபின், அதிலுள்ள பாதி பழங்களை மட்டும் மிக்சிஜாரில் போட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து நன்கு மையாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும்,அதில் சர்க்கரையை போட்டு, கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
மேலும் அதில் கிளறி விட்ட பால் கலவையில், மில்க் மைட், பால்கோவா போட்டு நன்கு கிளறி விட்டு நன்கு கொதிக்க வைத்தபின்,அதனுடன் அரைத்த மாம்பழ கலவையை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் கொதிக்க வைத்த கலவையில், துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள், குங்கும பூ சேர்த்து கரண்டியால் கிளறி விட்டபின், அதனுடன் கரைத்து வைத்த சோளமாவு கலவையை ஊற்றி நன்கு கிளறிவிடவும்.
கடைசியில் கிளறி விட்ட கலவையானது நன்கு கொதித்து கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போலானதும் இறக்கி ஆற வைத்தபின், குல்ஃபி கோப்பையிலோ அல்லது கிளாஸிலோ ஊற்றி பிரிட்ஜில் வைத்து, 6 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால், ருசியான மாம்பழ குல்ஃபி ரெடி.