Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தப்பித்துவிடலாம் என முயற்சி செய்தவர்… தொழிலாளிக்கு நடந்த சோகம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கிணற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாக்கியலட்சுமி மெயின் ரோடு பகுதியில் நித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் குடிநீரை தனது வீட்டின் தரைத்தளத்தில் இருக்கும் உறை கிணற்றுடன் இணைத்து விட்டார். இந்நிலையில் கழிவுநீர் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் கிணற்று நீரில் கலந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து 30 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றில் இறங்கி அதனை சுத்தம் செய்யும் பணியில் மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் காசி மற்றும் ரவி போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சமயம் எதிர்பாராதவிதமாக இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் காசியை முதலில் மேலே ஏற்றிவிட்டு ரவி பின்னால் ஏற முயற்சி செய்தபோது விஷவாயு தாக்கி ரவி மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இது குறித்து மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரவியின் உடலை மீட்டு விட்டனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |