Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு பற்றி பள்ளி  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் .  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அருகே அமைந்துள்ள டி.என்.பாளையம்  என்ற கிராமத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே. ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, விளாங்கோம்பை  என்ற வனப் பகுதியை சேர்ந்த கிராமத்தில் பள்ளிக்கூடங்களை தொடங்குவதற்கு  சிக்கல்  இருப்பதாகவும் , அதை வனத்துறை அதிகாரிகளின் உதவியோடு தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மலை கிராம பகுதியான விளாங்கோ மற்றும் கம்பனுர்  ஆகிய கிராமங்களுக்கு நடமாடும் நியாய விலை கடை தொடங்க விரைவில் அதற்கான பணி தொடங்கப்படுவதாகவும் தெரிவித்தார் .சட்டமன்றத் தேர்தலை குறித்து கேட்டபோது , அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின் தேர்தல் முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

பள்ளி பொதுத் தேர்வை பற்றி அவர் கூறும்போது , பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாறும் கேட்டுக்கொண்டார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வரைமுறையை பற்றி இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் மற்றும் ஓர் அறைக்கு 25 மாணவர்கள் மட்டும் இருக்குமாறு இருக்கைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வானது வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்துவது குறித்து கலந்தாலோசித்து பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார் . இந்த கல்வி ஆண்டு ஆனது மாணவர்களின் சேர்க்கை சற்று கூடுதலாகவே காணப்படுகிறது என்றும், இடைநிறுத்தம் என்பது தமிழகத்தில் இனி எப்போதும் இருக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Categories

Tech |