Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாயை துணியால் கட்டி போட்டு…. 10 பவுன் நகை அபேஸ்…. ஆத்தூரில் துணிகர சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் வசிப்பவர் அமராவதி (60). இவருடைய மகள் ருக்குமணி (40). இந்நிலையில் அமராவதி வீட்டில் ருக்குமணி மற்றும் பேத்தியுடன் சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அமராவதியின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். இதனால் பயந்து அவர்கள் பின் கதவை திறந்து பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் வந்த கும்பல், அமராவதி உள்பட 3 பேரின் வாயில் துணியை திணித்து அங்கு உட்கார வைத்து அவர்கள் கண்முன்னே வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்து தப்பியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர் .மேலும் அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதையடுத்து வாயைக் கட்டி விட்டு திருடி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |