Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்காக இதை செய்யுங்க…! சூப்பர் திட்டம் போட்ட ஜனாதிபதி…. OK சொல்லுமா USA, UK ….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் ஏழை நாடுகளுக்கு ஐரோப்பாவும் , அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% உடனடியாக அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாக்ரோன் கூறுகையில் தடுப்பூசியை பகிர தவறினால் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தடுப்பூசிகள் இதுவரை அதிக  வருமானம் கொண்ட நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. மாக்ரோன் அதற்கு முன்னதாகவே தடுப்பூசி விஷயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்யதற்கான தனது திட்டத்தை கூறினார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்கா ஜனாதிபதியான  பைடன் உலகளவிய தடுப்பூசி பகிர்வு திட்டமான கோவக்ஸ்க்கு 4 பில்லியன் டாலர் நிதி அளிப்பார் என்று உறுதியளித்துள்ளது .ஜி -7 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்கொடையாக கோவக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசி டோஸ்களை  வழங்குவார் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |