Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாட்டு தீவனத்திற்காக பதுக்கல்… அதிகாரிகளின் அதிரடி சோதனை… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

வீடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமனுக்கு வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாட்டு தீவனத்திற்காக இரண்டு பேர் ரேஷன் அரிசி வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மதியழகன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் மகாராஜபுரம் பெருமாள் கோவில் பகுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 1520 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் அதனை ஒப்படைத்து விட்டனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கூறும்போது, ரேஷன் அரிசியை இவ்வாறு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கக் கூடாது எனவும், இதனை மீறிய குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |