Categories
உலக செய்திகள்

சொத்துக்காக கணவர் செய்த காரியம்… முன்னாள் மனைவிக்கு நேர்ந்த சோகம்… சிசிடிவி காட்சியில் தெரியவந்த உண்மை…!

இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது அவர் மிகவும் தாக்கப்பட்டு இருந்துள்ளார்.மேலும் அவரது மண்டை ஓடு உடைந்து இருப்பதால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனை யார் செய்தார்கள் என்று போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

அப்போது சிசிடிவி காட்சியில் பால்விந்தர் கஹிர் கணவரும், அவருடைய மகனும் வீட்டிற்கு சிறிது தொலைவில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்தில் வெளியே வந்து திரும்பிச் சென்றுள்ளனர். இந்த காட்சி சிசிடிவி யில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை ஆய்வு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |