Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் விபத்து…. தீவிர சிகிச்சையில் தொழிலாளர்கள்…. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20-ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் கடந்த வாரம் 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெயந்தி மாலா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 தொழிலாளர்கள் தூத்துக்குடி, சாத்தூர், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |