தமிழகத்தில் ஏசி பேருந்துகளில் பயணிகள் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஏசி பேருந்துகளும் இயக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்க பட்டுள்ளன. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்க படலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஏசி பேருந்துகளில் 65 வயதான பயணிகளை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கும் ஏசி பேருந்தில் அனுமதிக்க முடியாது என அறிவுறுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் 702 ஏசி அரசு பேருந்துகளை இயக்கததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் விளக்கம் அளித்துள்ளது.