Categories
தேசிய செய்திகள்

WhatsApp-ல் இனி… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்கள் செயலிலிருந்து லாக் அவுட் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளது. மேலும் ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 போன்களில் பயன்படுத்த முடியும்.போன் இல்லாமலேயே whatsapp.web லாகின் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |