உலகில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் ஏலத்திற்கு வருகிறது.
தொழில்நுட்ப சாதனங்களிலேயே முன்னிலையில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். இந்நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தான் அடித்தளமிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் அறிவாளி, சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாக தலைவர் என்றெல்லாம் புகழப்பட்ட இவர் 2011-ம் வருடத்தில் புற்றுநோய் பாதித்து மரணமடைந்தார். எனினும் புதிய தொழில்நுட்பம், அப்டேட் போன்று தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தியதால் இவருக்கு தற்போது வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 1973 ஆம் வருடத்தில் தன் கைப்பட எழுதியிருந்த விண்ணப்ப கடிதம் ஒன்று தற்போது Charter Fields என்ற தளத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த 2018-ம் வருடத்தில் இவரின் விண்ணப்பம் ஏலம் விடப்பட்டபோது அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 1,75,000 டாலர் விலைக்கு ஏலம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விண்ணப்பத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் மேஜர் படிப்பில் இங்கிலீஷ் லிட்ரேச்சர் என்று எழுதியுள்ளார்.
மேலும் ஸ்கில்ஸ் பகுதியில் கம்ப்யூட்டர், கால்குலேட்டர் என்றும் தொழில்நுட்பம் டிசைன் பொறியியலில் சிறப்பு தகுதி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் எந்த நிறுவனம் மற்றும் என்ன வேலைக்காக விண்ணப்பித்தார் போன்ற விவரங்கள் இல்லை. எனினும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தான் குறிக்கிறது. மேலும் இந்த ஏலமானது வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.