சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் சினிமா மற்றும் அரசியல் துறைகளில் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிபடுத்தி சாதனை படைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை நடிகருக்கு என்று தனியிடம் உண்டு. அவர்கள் தங்கள் நடிப்பின் மூலம் பொது மக்களை சிரிக்க வைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கின்றனர். இந்த வரிசையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றவர்களில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஒருவராவார். பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் 1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் உள்ள குருவிக்கரம்பை என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் தனது வாழ்க்கையில் நடிகர், இசையமைப்பாளர், தமிழக அரசியல்வாதி என அந்தந்த துறைகளில் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி இந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், புதிய கீதை, பிதாமகன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.
மேலும் இவர் நடிகராக நடித்து வெளியான “திண்டுக்கல் சாரதி” என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதோடு இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, ராஜாதிராஜா போன்ற திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக இருந்த கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது இவர் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.