திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்.
இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட ஜாகிர் திடீரென்று இரவில் கூர்மையான கத்தியை கொண்டு முசில்லா கழுத்தை அறுத்தார் வலியால் துடிதுடித்த முசில்லாவின் அலறல் சத்தத்தை கேட்டு அவர்களின் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த முசில்லாவை கண்டு அதிச்சியடைந்து விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே முசில்லா இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.இதை அடுத்து குற்றவாளி ஆகிய ஜாகிரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.