Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு?… திடீர் திருப்பம்… திகைத்து நிற்கும் ஈபிஎஸ்….!!!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மௌனமாக இருந்து வரும் துணை முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்தால் கண்டிப்பாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதனால் ஈபிஎஸ் தரப்பு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |