நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது., இந்நிலையில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
அதாவது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது பற்றி ஆய்வு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் 11 வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.