மத்திய அரசின் திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு 2.67 லட்சம் வரையிலான மானியம் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 2.67 லட்சம் வரை மானிய உதவி பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 2021 ஆகும். எனவே குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் வீடு கட்டுவோர் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக்கொள்ளலாம்.
எப்படி அப்ளை பண்ணுவது?
இந்த திட்டத்தின் கீழ் pm-kisan பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். அனைத்து இ-சேவை மையங்களிலும் இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் 25 ரூபாய். ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
என்ன தகுதி இருக்க வேண்டும்?
1. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை
2. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
3. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை
4.ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை
பயன்கள்:
கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் அதிகபட்சமாக ஆறு லட்சம் வரையில் கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 6% மட்டுமே. ஒருவேளை இந்த தொகையில் வீடு கட்ட முடியாவிட்டால் அதை விட அதிகமான தொகையை கடனாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். எவ்வளவு கடன் வாங்கினாலும் எத்தனை தவணைகளில் கடனை திருப்பிச் செலுத்தலாம் என்பது பயனாளர்கள் கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும்.