தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால் அஸ்வின் தனது தந்தையான ஆரோக்கிய சாமியுடன் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி முதலாமாண்டு பட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது அப்பா, அம்மா இருவரும் பிரிந்து வாழ்வதை நினைத்து மனமுடைந்த அஸ்வின் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரோக்கியசாமி திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.