Categories
உலக செய்திகள்

“பணத்தை கொடு இல்ல உன்ன கொன்னுருவேன்”… சந்தைக்கு வருபவர்களிடம் வழிப்பறி… அச்சத்தில் பொதுமக்கள் ….!!

சுவிட்சர்லாந்தில் சந்தைக்கு வரும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் St.Gallen என்ற மண்டலத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், மர்ம நபர் ஒருவர் சந்தை பகுதியில் நின்று கொண்டு அங்கு வரும் மக்களிடம் பணம் கேட்பதாகவும் பணத்தை கொடுக்க மறுப்பவர்களிடம் கத்தியை காட்டி  கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரியவந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களை துன்புறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை  கண்டறிந்தனர். அந்த நபரிடமிருந்து கத்தியையும் கஞ்சாவையும்  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்பு, வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 நாட்கள் அந்த நபர்  நகருக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் காவல் நிலையத்திலிருந்து அவரை வெளியேற்றி உள்ளனர்.

இதற்கிடையில், காவல்துறையினருக்கு வழிப்பறி செய்யும் அந்த நபர் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது. மேலும், பலமுறை அவரை காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  கூறுகையில், “இது போன்ற கடினமான தருணத்தில் பொதுமக்கள் நிச்சயம் காவல்துறையினரை உதவிக்கு அழைக்க வேண்டும் ” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |