மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதிகளில்அதிகமாக பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் தங்கள் குடும்பத்துடன் இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள பூங்காக்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் மற்றும் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்ததோடு, மேலும் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட இந்த பூங்காவை புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.