Categories
மாநில செய்திகள்

Shocking: இனி சமையலில் யாரும் கருவேப்பிலை சேர்க்க முடியாது… அதிர்ச்சி…!!!

மதுரையில் ஒரு கிலோ கருவேப்பிலையின் விலை 120 ரூபாயை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலை.

இந்நிலையில் மதுரையில் ஒரு கிலோ கருவேப்பிலையின் விலை 120 ரூபாயை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் காய்கறிகள் வாங்குபவர்களுக்கு கருவேப்பிலையை இலவசமாக வழங்குவது நிறுத்தப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |