தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சியினரும், திமுகவினரும் மாறிமாறி மக்களை ஈர்க்கும் வண்ணமாக தேர்தல் அறிக்கையை அதிரடியாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க செய்வோம்.
மேலும் லஞ்சம் எதுவுமில்லாமல் பணிவாய்ப்புகள் வெளிப்படையாக வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா காரணமாக தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.