ரஷ்ய செய்தி நிறுவனத்தில் இந்திய இராணுவத்தின் பதிலடியில் 45 சீன இராணுவத்தினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் சீன ராணுவம் தன் படைகளை இந்திய-சீன எல்லையில் குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக இந்தியாவால் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் சீனா இதனை முற்றிலுமாக மறுத்து வந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தின் படைகளும் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தால் சீனாவின் 43க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அச்சமயத்தில் இந்தியாவின் 20 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதனை மறுத்து வந்த சீனா தற்போது வரை இந்திய ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சீன வீரர்களை பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது.
ஆனால் ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவலில், 45 சீன வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் “peoples Daily” என்ற அதிகாரபூர்வமான ஊடகத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதலில் சீனாவின் நான்கு வீரர்கள் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்த 4 வீரர்களுக்கும் விருது அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.