வெஜிடபிள் சேமியா செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 25 கிராம்
கேரட் – 50 கிராம்
முட்டைக்கோஸ் – 25 கிராம்
சிவப்பு குடமிளகாய் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பச்சைமிளகாய் – 3
கடுகு – கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 10 கிராம்
உளுத்தம்பருப்பு – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 30 மில்லி
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயம், முட்டைகோஸ், பச்சைகுடைமிளகாய், பீன்ஸ், சிவப்புகுடைமிளகாய், பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழையை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு கேரட்டை எடுத்து உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் அகலமான கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பொன்னிறமாகும் தாளித்து கொள்ளவும்.
மேலும் தாளித்த கலவையுடன், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கியபின், அதனுடன் நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர், முட்டைகோஸ் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய் சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கியபின், அதில் சேமியாவுக்கு இருமடங்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், ருசிக்கேற்ப உப்பு தூவி, கரண்டியால் லேசாக கிளறி விட்டபின், முடி வைத்து கொதிக்க விடவும்.
இறுதியில் கொதிக்க வைத்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சேமியா போட்டு நன்கு பிரட்டி விட்டு வேக வைக்கவும்.
பிறகு வேக வைத்த சேமியாவானது நன்கு வெந்து தண்ணீர் இறுகி கெட்டியாகி, பூ போல் உதிர் உதிராக ஆனபின், அதில் நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான வெஜிடபிள் சேமியா ரெடி.