சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் கடந்த வாரத்தோடு நான்கு வார பயணத்தை முடித்தனர்.
மேலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை. சீனாவில் உள்ள வுஹான் சந்தையிலிருந்து பரவி இருக்க வாய்ப்பு இருக்கலாம். எனினும் அதுபற்றி தெளிவான தகவல் தெரியவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும் வௌவாலால் சந்தையில் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் பிறகு வௌவாளிடமிருந்து வேறொரு விலங்கிற்கு பரவி பின்பு அந்த விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவி இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் செய்தியில் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளதை செய்தியாக வெளியிட்டுள்ளார்கள். மேலும் ஆய்வாளர்கள் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் . சந்தையில் சட்டபூர்வமான , சட்டவிரோதமாக விற்கப்படும் உயிருடன் அல்லது உயிரற்ற விலங்குகளின் முழு பட்டியலையும் விசாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.