Categories
டெக்னாலஜி பல்சுவை

“பயோமெட்ரிக் முறையில மோசடி நடக்கலாம்”… ஆனா இதுல வாய்ப்பே இல்ல… புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…!!

கை நரம்புகள் மூலம் தனி நபரை அடையாளம் காணும் தொழில்நுட்பம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையம் வழியாக குற்ற சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் பயோமெட்ரிக் போன்று பல முறைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த முறைகளிலும் அதிக அளவில் மோசடிகள் நடந்து வந்தது.  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்தாலும் அதில் சில குறைகள் இருப்பதாக தெரிவித்தனர்.  ஒருவர் தொட்ட திரையின் மேற்பரப்பிலிருந்து அவரது கைரேகைகள் சேகரிக்கப்பட்டு போலி கைரேகைகள்  உருவாக்கப்படலாம்.

அதன்மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்ய முடியும். ஆனால் தற்போது கை நரம்புகளை கொண்டு தனிமனிதரை  அடையாளம் காணும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை போன்று கிடையாது . கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இது பயோமெட்ரிக் முறையை விட சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர் சையத் ஷா  கூறியபோது, “நரம்புகள் தோலுக்கு அடியில் இருக்கிறது.

கைரேகைகளை நகல் எடுப்பது போன்று நரம்புகளையும்  நகல் எடுத்து மோசடியில் ஈடுபட முடியாது.  போலி நரம்புகளை உருவாக்குவது என்பது மிகவும் ஒரு கடினமான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.  35 பேர் கொண்ட குழு இந்த தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சியில் பங்கேற்றனர். ஆராய்ச்சியின் முடிவில் 99% அதிகமாக  துல்லியத்துடன் ஒரு நபரை அடையாளம் காண இம்முறை பயன்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆஃப் தி செல்ப் என்ற  3டி கேமராக்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். மடிக்கணினி மற்றும் மொபைல் போன்கள் போன்ற  சாதனங்களில் தனிநபர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |