பிரிட்டனில் வீடு ஒன்றில் குடி போன தம்பதியர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளார்கள்
பிரிட்டனில் டேரன் பல்ளிஸ்டெர் (27)மற்றும் ஜெஸ்ஸிகா மேசன்(27) என்ற இளம் தம்பதிகள் மெர்ஸிசைடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி போயுள்ளனர். அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துள்ளார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில் அந்த வீட்டில் யாரோ இருப்பது போல் இருக்கும், மேலும் இனிய மணம் வீசும் அதை உணர்வதற்குள் அது மாயமாகிவிடும். இந்நிலையில் அவர்கள் தங்கள் நாயை கவனிப்பதற்காக சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர்.
சிசிடிவி கேமராவை டேரன் பார்வையிட்டுள்ளார்.அந்த சிசிடிவி காட்சியில் ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு 12. 34 க்கு மணப்பெண்ணின் உடை அணிந்திருந்த ஒரு அழகான இளம்பெண் நடமாடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதைக் கண்ட டேரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அந்த பதிவை ஜெஸ்ஸிகாவிடமும் காட்டியுள்ளார். பிறகு அவர்கள் ஆவிகள் குறித்து ஆராயும் ஒருவருக்கு இந்த வீடியோவை காட்டி உள்ளார்கள். இதுகுறித்து அந்த வீடு சொந்தக்காரரிடம் கேட்டால் இந்த வீட்டில் அந்த மாதிரி எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்ததில்லை, அது பற்றி சரியாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் . எனவே டேரன் உள்ளூர் வரலாற்றாளர் ஒருவரிடம் காட்டி இது பற்றி மேலும் விசாரிக்க முயற்சி செய்யவுள்ளார்.