எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிகடவூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் கோபால் – மணி. கோபால் காய்கறி வியாபாரியாகவும், மணி கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகளும், கண்ணன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் மணி மற்றும் கண்ணன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று பிரியாவுக்கும், அவருடைய தந்தை கோபாலுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கடும் கோபத்தில் கோபால் இருந்துள்ளார். இதையடுத்து அதிகாலையில் கோபால் தன்னுடைய வீட்டின் முன் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரியாவும் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் பக்கத்தில் சிறிய கத்தி மற்றும் சுத்தியல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் கோபால் மனநலம் பாதிக்கப்பட்டது போல அடிக்கடி நடந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தன்னுடைய மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.