Categories
தேசிய செய்திகள்

பேக் கிக் செய்து பாட்டில் மூடியை தெறிக்கவிடும் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு..!!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற  சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில்  “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும்.

Image result for Sports Minister Kiren Rijiju Nails

அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. தற்போது இந்த சேலஞ்ச் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த சேலஞ்சை கஜகஸ்தானை சேர்ந்த டேக்வொண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்ஸின் முதலில் செய்து வீடியோவாக வெளியிட்டு, இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என்று சவால் விட்டார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் “பாட்டில் கேப் சேலஞ்ச்” வைரலாகி ட்ரெண்ட் ஆனது.

Image result for "பாட்டில் கேப் சேலஞ்ச்"

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர் ஹாலிவுட் நடிகை  ஒயிட் கம்மிங்ஸ், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் உட்பட பலரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மேலும் திரைப்பட நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இதனை செய்து வருகின்றனர். நிறைய பேர் இதை செய்து பார்த்து பல்பும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். 47 வயதான கிரென் ரிஜிஜு அற்புதமாக பேக் ஷாட் அடித்து மூடியை பறக்க விட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாட்டில் மூடியைத் திறப்பது என்பது சர்ஜிக்கல் அறுவை சிகிச்சை போன்ற ஒரு செயலாகும். இது கவனம், சமநிலை மற்றும் வலிமை ஆகியவை  ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அதிக ஒழுக்கத்தை வளர்க்க விரும்பினால், நீங்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். உடற்தகுதி என்பது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல, ஆனால் ஒழுக்கத்தைப் பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.   

 

Categories

Tech |