Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தில் உள்ள கற்களை… முற்றிலும் குணமாக்கணுமா ? அப்போ… கவலைய வேண்டாம்… இந்த ரெசிபி ஒண்ணு போதும்..!!

வாழைத்தண்டு துவையல் செய்ய தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு     – 1 பெரிய துண்டு
உளுத்தம்பருப்பு   – 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்  – 4
புளி                               –  சிறிதளவு,
பெருங்காயத்தூள்– கால் டீஸ்பூன்,
எண்ணெய்                – ஒரு டீஸ்பூன்,
உப்பு                             – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் உள்ள நாரை தனியாக நீக்கி கொள்ளவும். அடுப்பில் அகலமான  வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து  வைத்துக் கொள்ளவும்.

மேலும் அதே வாணலியை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வாழைத் தண்டை போட்டு ஓரளவு வேகும் வரை நன்கு வதக்கியபின், இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.

பிறகு மிக்சிஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு கலவையை போட்டு நன்கு அரைத்தும்,அதனுடன் வதக்கிய வாழைத் தண்டுகளை போட்டு, ருசிக்கேற்ப உப்பு, புளி, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக அரைத்து எடுத்து,  சூடாக தோசை அல்லது இட்லியுடன் பரிமாறினால், ருசியான வாழைத்தண்டு துவையல் ரெடி!

Categories

Tech |