அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு உறுதியாகி உள்ளது.
இதனால் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த 3 மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளியை மூடி கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.