பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது என்று கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரசியல் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
எங்கள் கோரிக்கை, பெயர் மாற்றம் மட்டுமல்ல பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான். பிரதமரிடம் பட்டியல் வெளியேற்றம் குறித்து கோரிக்கை விடுப்பேன். அது நிறைவேற்றப் படவில்லை எனில் பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கிடைக்காது என்று மேலும் தெரிவித்துள்ளார்.