Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடரும் பெண்சிசுக்கொலை: பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. தலையணையை வைத்து அமுக்கி கொலை…!!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை தலையணை அமுக்கி கொலை செய்துள்ளது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பாறைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் சின்னசாமி – பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து பிரியங்காவுக்கு கடந்த வாரம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறிய சின்னசாமி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மேலும் குழந்தை முகத்தில் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பிறந்து ஏழு நாட்களான பெண் சிசுவை பாட்டி நாகம்மாள் தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறல் செய்து கொன்றுள்ளது  தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நாகம்மாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |