காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது.
உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் வரவேற்பு அறையில் தரையில் முகத்தைக் கீழே சாய்ந்து படுத்திருந்தேன்.
திடீரென்று என் யோனி வழியாக காற்று என் உடலுக்குள் புகுந்து நான் இருந்த அறையில் பலமாக காற்று வீசியது. காற்று வீசிய 15 நிமிடங்கள் கழித்து என் வயிற்றில் வலி ஏற்பட்டது. பின்னர்தான் அது வயிற்றுக்குள் ஏதோ பெரியதாக இருப்பதை உணர்ந்தேன். அன்றைய தினமே எனக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நான் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளேன். எனது கர்ப்பத்திற்கு காரணம் உடல் உறவு இல்லை என சிதி ஜைனா கூறினார்.
மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் வினோதமாக இருந்தது. இது தீயாய் பரவ ஆரம்பித்தது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது தெரியவந்தது. அவருடைய முன்னாள் கணவர் மூலமாக ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் போலீசார் சிதி ஜைனாவின் முன்னாள் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு வெளியே ஏற்பட்ட உறவின் காரணமாக உருவாகிய குழந்தை குறித்து ஜைனா மறைத்திருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கின்றனர். மத கோட்பாடுகளை இது சார்ந்து உள்ள காரணத்தினால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .குழந்தை பிறப்பு தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர். சைனாவின் கர்ப்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பதாலும் இது ரகசியமான கர்ப்பத்தின் ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரசவத்திற்கு நுழையும் வரை தாய் தனது கர்ப்பத்தை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்