Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு”… மகாராஷ்டிர முதல்வர்..!!

முககவசம் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து நாம் தப்பிப்பதற்கு பாதுகாப்பான ஒன்று என மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் மஹாராஷ்டிர மாநிலத்தில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வைக்க மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளரை சந்தித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாழும், கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் முககவசம் மட்டுமே ஆயுதமாக இருக்கின்றது. மேலும் கொரோனாவிற்கு எதிராக நாம் போராடி கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார். எனவே மக்கள் முக கவசம் அணிவதை தவிர்க்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |