Categories
தேசிய செய்திகள்

எங்களையும் சிந்தித்துப் பாருங்கள்… “அமேசான் ப்ளிப்கார்ட் வெளியேறக் கோரி போராட்டம்”..!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வர்த்தகக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், பிற நிறுவனங்கள் போட்டியிட முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை குறைத்து தருவதன் மூலம் சந்தையில் சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமேசான் மீது குற்றம் சாட்டினார்.

அமேசான் மற்றும்  ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வணிக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றும் கண்டெல்வால் கோரிக்கை விடுத்தார். அந்நிய முதலீட்டு விதிகளை இந்திய நிறுவனங்கள் மீறுகின்றன. இது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வர்த்தகர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |