Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக மாட்டாங்க”… எப்படி தெரியுமா…? காரணம் இதுதான்..!!

சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள் . எப்படி தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன .மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக அதிகரித்தும் கூட எடை உயர்ந்த பாடாக இருக்காது. இவர்கள் தங்கள் எடையை அதிகரிக்க டோனட், பீட்சா போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை கூட எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ஒல்லியானவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள். எப்படி இவ்வளவு உணவுகளை சாப்பிட்டும் கூட ஒல்லியாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். அதன் ரகசியம் என்ன என்றால் ஒல்லியாக இருப்பதற்கு வேகமான வளர்ச்சிதை மாற்றம் மட்டுமே காரணம். இது கேள்விக்கு பதில் கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளது. மெலிதான மக்கள் உடல் எடையைப் பராமரிக்க உதவும் மரபியல் ஊட்டச்சத்து மற்றும் நடத்தை காரணிகள் கூட இதில் அடங்கும். இவர்கள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவ்வாறு  உள்ள மக்கள் அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவர்கள் ஒலியாக இருப்பதற்கு ஒரு உதவியாக இருக்கும். வீட்டு வேலைகளில் அதிக அளவு ஈடுபடுபவர்களும் ஒல்லியாக இருப்பார்கள். மரபியல் பங்கும் மற்றொரு காரணம். கடுமையான உடல் பருமன் கொண்ட 1985 பேரிடமிருந்து சாதாரண எடையுள்ள 10 ஆயிரத்து 433 கட்டுப்பாடான மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தபோது  பங்கேற்பாளர்களுக்கு உடற்பருமன் தொடர்பான மரபணுக்கள் குறைவாக இருப்பதாக முடிவுகள் கூறுகிறது.

மரபணு மட்டுமே எடை அதிகரிப்பு மற்றும் எடை குறைப்புக்கு பங்களிக்கும் ஒரே விஷயம் அல்ல. மரபணு மட்டுமே ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கும் குண்டாக இருப்பதற்கும் காரணம் கிடையாது. நமது உடல் எடையை நிர்ணயிப்பது நமது மரபணுக்களில் ஒரு பங்கு. உங்கள் தூக்க முறை, வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், உணவுகள் ஆகியவையே உங்கள் உடல் எடையை தீர்மானிக்கின்றது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குறைவாக சாப்பிடுவது அல்லது அதிகமாக நகர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்கள் வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வாருங்கள்.

Categories

Tech |