Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல், டீசல்” வாழை இலையும் தப்பல….. ரூ500-லிருந்து ரூ2,500 ஆக உயர்வு……!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன்படி பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலைகளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. கருவேப்பிலை விலை ஒரு கிலோ 150 ரூபாய் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது வாழையிலை விலையும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் சந்தை நிலவரத்தின்படி 500 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு இலை தற்போது 2500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.2 ஆக இருந்த இலையின் விலை ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமா என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |