Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மூடல்… பெரும் அதிர்ச்சி செய்தி… பெற்றோர்கள் கவலை…!!!

திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் திண்டுக்கல்லில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா. பாதிப்பு உருவாகியுள்ளதால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த 3 மாணவிகளும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயார்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அந்த பள்ளியை மூடி கிருமி நாசினி தெளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |