Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : கொஞ்ச நாளுக்கு “ADJUST” பண்ணிக்கோங்க, அப்புறம்…..? அமைச்சர் சர்ச்சை பதில்….!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள் பஸ்சில் செல்வதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மாநில அமைச்சர் நாராயண பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் பேசுகையில், ” சாதாரண மக்கள் பேருந்தில் பயணிக்கின்றனர். சிலர் மட்டுமே வாகனங்களில் செல்கின்றனர் எனவே சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விலையேற்றத்துக்கு பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 11வது நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சதம் அடித்து விட்டது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 90.16 ரூபாயாக இருக்கிறது. இந்நிலையில் பணவீக்கம், விலை உயர்வுக்கும் மக்கள் பல விட்டதாக பழகி விட்டதாக அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,” விலை உயர்வால் நானும் தான் பாதிக்கப்படுகிறேன். மக்களுக்கும் பழகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |